கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வரும் 1 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தங்கமுலாம் பூசப்பட்ட 44 புதிய கலசங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து குதிரை, யானை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இக்கோவிலில் 2028 ம் ஆண்டு மகாமக விழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 2023-ம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களுக்கும் புது கலசங்கள் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.