திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவர் 20 அடி நீள வேல் அலகு குத்தி வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. செட்டிப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்கால ஊர்வலம் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது.