மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யானைகள் மீது புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. வரும் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்வதற்கான புனிதநீர் கோயில் முகப்பு பகுதியில் இருந்து மூன்று யானைகளின் மீது ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது. மேலும், பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.