திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் வழி பேருந்து நிலையத்தை வரும் 22 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.