முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.