திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, குமர விடங்க பெருமாளுக்கும், தெய்வானை அம்மனுக்கும் இடையே தோல் மாலை மாற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி குமரவிடங்க பெருமானை தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்ததை தொடர்ந்து நடைபெற்ற மாலை மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.