தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக தினமும் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட வேடங்களை அணிந்து, தசரா குழு அமைத்து காணிக்கை வசூலித்து குலசேகரன்பட்டினம் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.