தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் சுடலைமாடன், பத்திரகாளி போன்ற தெய்வங்களின் வேடமணிந்த பக்தர்கள் அருள் வந்து ஆடினர். இதில் சுமார் 8 கிலோ எடை கொண்ட வெண்கல அக்னி சட்டியை பக்தர் ஒருவர் மூன்று விரலில் தலைக்கு மேல் தூக்கி நிறுத்தி ஆடியது அனைவரையும் கவர்ந்தது.