தஞ்சை மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் குடுமி தேவர் பெருமான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும் சுவாமி சிலைகளை மாட்டு வண்டியில் வைத்து, வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.