தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வலுவிழந்து ஆபத்தான நிலையில் காணப்படும் குடமுருட்டி பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகை வாகனங்களும் வழக்கம் போல் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என பிளக் பேனர் மட்டும் வைத்து விட்டு, முறையாக கண்காணிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடன் பயணித்து வரும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், அருகிலேயே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் புதிய பால பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.