கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், கே.ஆர்.பி. அணையின் நீர்வரத்து 2 ஆயிரத்து 587 அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஆர். பி. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 835 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்ட கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.