கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் படநிலத்தில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க புனித நீரை ஊர்வலமாக எடுத்த வந்த சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். திரளான பகதர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.