கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மது போதையில் தகராறு செய்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த திருமால், சுவாமிநாதன், திருப்பதி உள்ளிட்டவர்கள் ஒன்று சேர்ந்து மது குடித்த நிலையில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், திருமாலின் வயிற்றில் சுவாமிநாதன் கத்தியால் குத்தினார்.