நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. முகாமில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் கிருஷ்ணா, பெம்மி ஆகிய இரு யானைகளும் பூஜை செய்தன.இதனை தொடர்ந்து, அங்குள்ள யானைகளுக்கு ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழவகைகள் உணவாக வழங்கப்பட்டன. யானைகள் நடத்திய பூஜையை ஏராளமான சுற்றுப்பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.இதையும் படியுங்கள் : ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்ற விநாயகர்