திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறுபுலியூர் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிருபா சமுத்திர பெருமாள் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தன. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.