திருமாவளவனும், வேல்முருகனும் அவர்கள் இருக்கும் கூட்டணி கட்சிக்காக குரல் கொடுக்காமல் தங்களது சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி கே.ஆர். பி அணையிலிருந்து விநாடிக்கு 4292 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி அங்கு ஆய்வு செய்த அவர், அணையின் பாதுகாப்பு மற்றும் ஆற்றங்கரையோர மக்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற கருத்தை ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் தான் கூறி வருகின்றனரே தவிர அதிமுகவினர் அல்ல என்றார்.