வெறிச்சோடி காணப்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையம், தீபாவளிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் வருகையால் மீண்டும் களைகட்டியுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, ஆந்திரா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.