சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சாட்டுதல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பூக்களை கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.