சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொலு கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். நவராத்திரி விழாவை ஒட்டி நவராத்திரி கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராஜ்பவன் இமெயில் மூலமாக விண்ணப்பிக்கும் பொதுமக்கள், வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு கண்காட்சியில் பங்கேற்கலாம்.