புதுக்கோட்டை மாவட்டம், தேவஸ்தான மற்றும் நவராத்திரி கலைக்குழு விழாக் குழுவினர் நடத்தும் 15ஆம் ஆண்டு நவராத்திரி கலை விழா புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது.இந்த நவராத்திரி விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பல்வேறு வகையான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த கண்காட்சியில், திருமண விழா, குலக்கல்வி முறை, பள்ளி பாடம் நடத்துதல், கிரிக்கெட் விளையாடுதல், குழந்தைகள் விளையாடுதல் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கொலு பொம்மைகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.