ஆஞ்சநேயர் கோயிலைக் கடந்து ஆர்ப்பரித்து செல்லும் கொள்ளிடம் ஆற்று நீரைக் கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை 7ஆவது முறையாக நிரம்பி, வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை, கொள்ளிடம் உள் அணையில் 11,000 கன அடி வீதமும், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் 41,000 கன அடி வீதமும், வினாடிக்கு 52 ஆயிரம் கன அடி வீதம் கடந்து செல்லும் நிலையில், கொள்ளிடம் கதவு வழியாக சீறிப் பாய்ந்து வரும் தண்ணீர், கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி நீர் பாய்ந்து வெளியில் செல்கிறது. கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளும் நீரானது தொட்டு செல்கிறது. இதை பொது மக்களும் கல்லணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ரசித்து வருகின்றனர்.