கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகினர்.இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோயில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். இதேபோல தனியார் வங்கி தரப்பு நிர்வாகிகளுக்கும் இந்த விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.அதன்படி இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி அதிகாரி ஆவணங்களுடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணயை மேற்கொண்டுள்ளனர்.