சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் உள்ள கலியுக அய்யனார் கோவிலில், நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கிடா பூசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கலியுக அய்யனார், பொய் சொல்லா மெய் அய்யனார் கோவிலில் அருள்பாலித்து வரும் சங்கிலி கருப்பர் சுவாமிக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஐந்து கால் பணம் என்று சொல்லக்கூடிய நிதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த பூஜையில், நள்ளிரவில் கிடா வெட்டப்பட்டு ஆட்டுக்கறியுடன் ரசமும், பச்சரி சாதமும் சமைக்கப்பட்டது. பின்னர் 64 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விழாவில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் பச்சரிசி சாத உருண்டைகளும், ஆட்டுக்கறியுடன் ரசமும் பரிமாறப்பட்டது.