நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்ப சாமி கோவிலில் கிடா வெட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலாக கொடுத்த 300 ஆடுகளை வெட்டி உணவு சமைத்து கோவிலுக்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.