புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் குடியிருப்பு வாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதை தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்த நிலையில், அந்த பாதை இருகுடும்பத்துக்கும் சொந்தமானதில்லை என கீரனூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.