கரூர் துயரச் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குருவி சுடுவதுபோல 13 பேரை சுட்டுக் கொன்றபோது, அவர்களை இபிஎஸ் நேரில் சென்று பார்த்தாரா? என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜயை பற்றி பேச இபிஎஸ்-க்கு தகுதியில்லை என்றவர், முகத்தை பார்த்து மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு இபிஎஸ் செல்வாக்கு மிக்கவரா? என்றும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா...கோவை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக்கழக நிர்வாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சினிமாவில் இருந்து எம்ஜிஆர் மூன்று முறையும், ஜெயலலிதா 5 முறையும் முதல்வராக இருந்துள்ளார்கள் எனவும் திரைபடத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும் என்றும் கூறினார். வெற்றி பெற முடியும் என்பதை எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோர் உருவாக்கி உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.வெற்றி பெற்றதாக வரலாறு இல்லைவருகிற தேர்தலில் DMK, TVK இடையே தான் போட்டியே தவிர, வேறு யாருக்கும் போட்டி இல்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்றும் கூறியதுடன், கட்சி பொது செயலாளராக எடப்பாடி இதுவரை வெற்றி பெற்றதாக எந்த வரலாறும் இல்லை என்றும் செல்வாக்கு மிக்க தலைவரை, மக்கள் விரும்பும் தலைவரை பற்றி பேசுவதை ஏற்க முடியாது என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு குடும்பங்களில் 40% வாக்குகள் எங்களுக்கு இருக்கிறது என சர்வே தற்போது கூறுகிறது என்றும் கூறினார். 2026ல் ஆட்சி அமைப்போம்தூத்துக்குடியில் 13 பேரை குருவி சுடுவது போன்று சுட்டு கொன்ற போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பார்த்தாரா? என கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், இப்போது விஜய்யை பார்த்து கேள்வி கேட்கிறார் எனவும் சாடினார். கொடநாடு எஸ்டேட்டில் 2 கொலை நடைபெற்ற நிலையில், இதை பற்றி அப்போது முதல்வராக இருந்தவருக்கு தெரியவில்லை எனவும் எடப்பாடி எப்படி தவழ்ந்து வந்தார்? என நாட்டிற்கு தெரியும் என்பதால் விஜய் பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது எனவும் செங்கோட்டையன் கூறி உள்ளார். 2026ல் ஆட்சி அமைப்போம் எனவும் உறுதிபட கூறினார். Related Link விஜய் சிறந்த நடிகர் அவ்வளவுதான் - இபிஎஸ்