நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஆண்டுவிழா திருவிழா போல் களைகட்டியதால் குழந்தைகள் உற்சாகமடைந்தனர். மாடர்ன் கல்வி குழுமத்தின் பிரபாகர் நினைவு மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மண் மனம் கமழும் கிராமிய நடனங்களும், கருப்பசாமி ஆட்டமும் நடைபெற்றது.