சென்னையில் செருப்பு தைக்கும் ஊசியால் தம்பியை குத்தி கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரும்பாக்கத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகளான இருதயத்திற்கும், அவரது தம்பி லூர்துசாமிக்கும் இடையே 2021-ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், லூர்துசாமியை கொன்றதாக இருதயம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.