ராணிப்பேட்டை அருகே நிதிநிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகளை கடத்தி 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டதைச் சேர்ந்த அல்தாப் தாசிப் என்பவரது மனைவி மற்றும் மகளை அவரது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் வசந்தகுமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து புகாரின் பேரில், பணம் தருவதாகக் கூறி அவர்களை வரவழைத்து துரத்தி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.