பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த சுந்தர்.சி - குஷ்பூ குடும்பத்தினர் தடையை மீறி செல்போனை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி மலை மீது பக்தர்கள் செல்போன் பயன்படுத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் நடிகை குஷ்பூ, அவரது கணவர் சுந்தர்.சி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்த போது மலை மீது பல இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இச்சம்பவம் பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.