ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்களில் ஒருவரான ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மறைந்த ரவுடி சிவக்குமாரின் கூட்டாளியாக இருந்து வந்த புதூர் அப்பு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.