ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 176 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற சொகுசு காரை, கேரளா போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட்டில் இருந்து ஏர்வாடி அருகே கோயில்வாசல் பகுதி வரை விரட்டி சென்ற போலீசார், அதிலிருந்த ஒருவரை கைது செய்தனர். காரை நிறுத்தி விட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.