தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரி ஓட்டுநர்களை கேரளா காவல்துறையினர் தாக்கி பொய் வழக்கு போடுவதாக கூறி, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மெட்டு சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.