நெல்லை மாவட்டம் இலந்தைகுளம் உள்ளிட்ட இடங்களில் கொட்டிப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை 18 லாரிகள் மூலம் கேரளா மாநிலத்திற்கு அனுப்பபட்டன. கேரளா மாநிலத்தில் இருந்து டாரஸ் லாரிகளுடன் வருகை தந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு, இலந்தைகுளம், வேளார்குளம், கோடகநல்லூர் மற்றும் திடியூர் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை முற்றிலுமாக அகற்றி லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பினர். பழவூர், கெண்டநகரம் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள் திங்கட்கிழமை முற்றிலுமாக அகற்றப்பட்டு லாரிகள் மூலம் கேரளாவிற்கு எடுத்து செல்லப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.