கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரித்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் கே.ஆர்.பி. அணையின் நீர்வரத்து அதிகரித்து மொத்தக் கொள்ளளவான 52அடியில் 50.55அடியை எட்டியது. இந்நிலையில் விநாடிக்கு 4 ஆயிரத்து 249 கன அடி நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஆர்பரித்துச் செல்கிறது.இதையும் படியுங்கள் : ஆற்காடு பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்