கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை மிதந்து சென்றன. தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1206 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணையில் இருந்து வெளியேறும் நீரில் ரசாயண நுரைகள் மிதந்து செல்கின்றன.