தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழகொருக்கப்பட்டு கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முத்துமாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் மின் அலங்கார தேரில் எழுந்தருள திருத்தோரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.