ஈரோட்டில் தனியார் செல்போன் ஷோரூமை நடிகை கீர்த்தி சுரேஷ் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். முன்னதாக அவருக்கு செல்போன் ஷோரூம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், ஈரோட்டிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தால் வெளியே அழகாக தெரியலாம் என்று கூறினார்.