மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கவியருவிக்கு வரும் வாகனங்கள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திருப்பி அனுப்பப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.