ஐப்பசி மாத பிறப்பையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர். முன்னதாக பக்தர்களுடன் இணைந்து ஆதீனகர்த்தாவும் தெப்பகுளத்தில் நீராடினார்.