தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த கௌசல்யா வெற்றிபெற்றார். தலைவராக இருந்த உமா மகேஸ்வரி மீது கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதால், அவர் பதவியை இழந்தார். இதையடுத்து நடைபெற்ற புதிய தலைவருக்கான தேர்தலில், திமுகவை சேர்ந்த கௌசல்யாவும், அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். இதில், கௌசல்யா 22 வாக்குகள் வாங்கி வெற்றிபெற்ற நிலையில், அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பத்துக்கு வெறும் 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து, அக்கட்சியினர் நகர்மன்ற அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.