இமானுவேல் சேகரனாரின் குருபூஜையை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மா உணவக நுழைவு வாயிலில் பாஜகவை சேர்ந்த நடிகை கஸ்தூரி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, பெண்கள் முண்டியடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் அம்மா உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் உள்ளே செல்ல முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.தேவேந்திரகுல வேளாளர் பொதுநல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி கலந்து கொண்டு, இமானுவேல் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கிருந்த பெண்கள் கஸ்தூரியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் வைத்திருந்த போதிலும் பெண்கள் பலர் புடவை வாங்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.இதையும் பாருங்கள்; அம்மா உணவகத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய நடிகை கஸ்தூரி, பெண்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு