மீன் பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில், மீன்களின் விலை அதிகரித்திருந்த நிலையிலும் மக்கள் ஆர்வமாக மீன்களை வாங்கி சென்றனர். ஒரு கிலோ வஞ்சரம் 1000 ரூபாய்க்கும், சங்கரா 600-க்கும், நண்டு 450-க்கும், இறால் 550-க்கும் விற்பனை செய்யப்பட்டது