கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக , பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.