4 வது கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில் பெருவுடையாருக்கு விபூதி, மஞ்சள், திரவியப் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.