ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.கண்ணகி நகரிலுள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்த சரத்குமார், கபடி விளையாட்டுக்கும், உடல் வலிமை பெறுவதற்கும் தேவையான உபகரணங்களை வாங்கித் தருவதாக கார்த்திகாவிடம் உறுதியளித்தார்.