நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிருஷ்ணர் கோவில் உறியடி திருவிழாவில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி திருவிழாவை கொண்டாடினர். இந்தக் கோயிலில் ஆண்டுத்தோறும் உறியடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான உறியடி திருவிழாவையொட்டி பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து பஜனைகள், மேளதாளங்கள் உடன் நடைபெற்ற உறியடியில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.