சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த மேயர் பிரியா, மாணவிகளுடன் இணைந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டார். 2024- 2025-ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், கராத்தே பயிற்சி திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் மாணவிகளுடன் இணைந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டார்.