சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி மேயரின் பதவி ஏற்பு விழாவுக்காக, பேருந்து நிலையத்துக்கு செல்லும் முக்கிய சாலையை மறித்து மேடை அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காரைக்குடி நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், திமுகவை சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், குணசேகரன் துணை மேயராகவும் பதவி ஏற்க உள்ளனர். இரு தினங்களில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவுக்காக பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையை மறித்து மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மாற்று பாதையில் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.