சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருக்கல்வாடி கிராமத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேரு நகரில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து, கடந்த 10 ஆம் தேதி குடமுழுக்கு விழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர், கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.